விற்பனைக்கு வந்த அஜித்தின் இந்த குறிப்பிட்ட காரை பற்றி தெரியுமா ? விலை எத்தனை லட்சம் தெரியுமா ?

0
9638
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார். அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு தல கார் ஓட்டுவதில் கில்லாடி என்றும் சொல்லலாம்.அதே அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் கார் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார். மேலும்,அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு நடிப்பை காட்டிலும் பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

- Advertisement -

அவருடைய எல்லா படத்திலும் ஒரு சீனில் ஆவது பைக் ரேஸ் காட்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்டபார்வை படத்திலும் ஒரு பைக் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித் அவர்கள் தான் செய்தார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த நிலையில் அஜித்தின் கார் ஒன்று கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்தது.

அஜித் பய்னபடுத்திய ஹோன்டா அக்கர்ட் கார் ஒன்று கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளது. பல்வேறு விதமாக மாற்றியமைக்கப்பட்ட இந்த காரை பிரபல யூடுயூபரான இர்பான் ஓட்டி பார்த்து அதன் சிறப்பு அம்சத்தை விளக்கினார். மேலும், இந்த காரின் பதிவு சான்று கூட அஜித்தின் பெயரில் தான் இருக்கிறது. இந்த காரின் விலை 15 லட்சம் என்றும் கூறி இருந்தார். ஆனால், இந்த கார் விற்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement