படங்களில் வில்லன் நிஜத்தில் ஹீரோ – ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆனந்த் ராஜ் செய்து வரும் விஷயம்.

0
451
- Advertisement -

நடிகர் ஆனந்தராஜ் செய்து இருக்கும் செயலை பாராட்டி நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பியவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து நடிகர்களுக்கும் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ்.

-விளம்பரம்-

இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான் நடித்து இருக்கிறார். 1998 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தின் மூலம் தான் ஆனந்தராஜ் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 130க்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் ஆனந்த்ராஜ் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆனந்த் ராஜ் நடித்த படங்கள்:

மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே இவர் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜாக்பாட், டிக்கிலோனா, பிரின்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல், கோப்ரா போன்ற படங்களை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனந்த் ராஜ் நடிக்கும் படங்கள்:

தற்போது சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் ஆனந்தராஜ் நடித்திருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து இவர் ஆயிரம் ஜென்மங்கள், இடியட், கள்ள பார்ட், வல்லவனுக்கும் வல்லவன், ராயர் பரம்பரை, சூர்யாவின் 42வது படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

ஆனந்த் ராஜ் செய்த செயல்:

அதாவது, ஆனந்த் ராஜ் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் உணவளித்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே, இந்த நல்ல மனிதரை முடிந்தால் பாராட்டுங்கள். சினிமாவில் வேண்டுமானால் இவர் வில்லனாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் இவர்தான் ஹீரோ என்று பதிவிட்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement