கைகொடுக்காத சினிமா, தவறான பாதை – பரிதாபமாக இறந்த சினிமா பிரபலங்களின் லிஸ்ட்.

0
617
- Advertisement -

பொதுவாகவே சினிமாவினால் பல பேருடைய வாழ்க்கை உச்சத்திற்கு சென்றிருக்கிறது. பெயர் , புகழ், பணம் என்று கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மக்களையும் சினிமா பிரபலப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் சில பேர் பிச்சை எடுக்கும் நிலைக்கு இந்த சினிமா தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து பிச்சை எடுத்து பரிதாபமாக இறந்து போன நடிகர்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

உதய பிரகாஷ்:

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான குணச்சித்திர நடிகராக இருந்தவர் உதய பிரகாஷ். குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த வீரா, மன்னன் போன்ற படங்களில் இவர் வில்லனாக மிரட்டி இருந்தார். அது மட்டும் இல்லாமல் குஷ்பூ- பிரபுவின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சின்னத்தம்பி படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் தான் நடித்திருந்தார்.

- Advertisement -

பின் இவர் படத்தை தயாரிக்கும் நோக்கில் சென்றதால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார். அந்த பாதிப்பில் இருந்து உதய பிரகாசால் மீண்டு வரவே முடியவில்லை. பின் நடிகர் சங்கத்தின் சார்பாக அவருக்கு சரத்குமாரின் திவான் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும் இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தினால் எல்லாத்தையும் இழந்து நடுவீதிக்கு வந்தார். இறுதியில் இவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். அதற்குப்பின் இவர் இறந்துவிட்டார்.

நிஷா நூர்:

சினிமா திரை உலகில் 80ஸ் கட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் தான் நடிகை நிஷா நூர். இவர் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தவர். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிக்கு பேர் போன சில்க்குக்கு பிறகு கவர்ச்சி நாயகி என்று தான் நிஷாவை அழைப்பார்கள். நிஷா அவர்கள் அதுவே(கவர்ச்சி) தன்னுடைய வாழ்க்கை எனவும், பாதை எனவும் உறுதி செய்து அதன் வழியிலேயே கண்ணை மூடிக் கொண்டு சென்றார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் நிறைய தவறான பழக்க வழக்கங்கள் செய்ய தொடங்கினார். அந்த பழக்கவழக்கங்களினால் தான் நடிகை நிஷா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். பின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்காவில் கவனிப்பு இன்றி எறும்புகள்,ஈ மொய்க்கும் அளவிற்கு இறந்து கிடந்து இருந்தார்.

பல்லு பாபு:

நடிகர் பரத் நடிப்பில் சங்கர் தயாரிப்பில் வெளியாகியிருந்த காதல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் தான் நடிகர் பல்லு பாலு. அதற்கு பின் இவர் தளபதி விஜய் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் இவர் மனம் உடைந்து தெருத் தெருவாக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது இவர் என்ன நிலையில் இருக்கிறார்? என்று கூட தெரியவில்லை.

Advertisement