தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர். நடிகர் விசு அவர்கள் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன் ஆகும். இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதற்குப் பிறகு விசு நடித்த முதல் படம் ரஜினியின் தில்லு முல்லு.
அந்த படத்தில் இவரே டப்பிங் குரலும் செய்து உள்ளார். பின் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். பின்னர் நடிகர் விசு அவர்கள் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மணல் கயிறு, ரகசியம், புதிய சகாப்தம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இதையும் பாருங்க : இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் மேக்கப் இல்லா புகைப்படம்.
இவர் கடைசியாக தங்கமணி ரங்கமணி என்ற படத்தை இயக்கி உள்ளார். இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் உள்ளார். உமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள்.
தற்போது இவர்களுக்கு 74 வயதுஆன நிலையில் . நடிகர் விசு அவர்கள் தன்னுடைய வயதான காலத்தில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுவந்தார். இறுதியாக நெற்றிக்கண் இயக்கத்தில் தனுஷ் நடிக்க போகிறார் என்ற வதந்தியின் போது தான் விசு பேட்டி கொடுத்து இருந்தார். அந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்த நிலையில் இயக்குனர் விசு காலமாகியுள்ளார். அவருக்கு வயது 74 இந்த சோகமான தகவலை நடிகரும் இயக்குனருமான எஸ் வீ சேகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் அருமை 50 ஆண்டுகால நண்பன் நாடக திரைப்பட கதை வசனகர்தா இயக்குனர் விசு சற்றுமுன் நம்மை விட்டு பிரிந்து விட்டார். A GREAT LOSS என்று பதிவிட்டுள்ளார். இதனால் திரையுலகமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.