காதுகுத்து, சாவு என நான் பாடின கானா காலங்களில் இருந்த சந்தோஷங்களை ரொம்பவே மிஸ் பண்றேன் – இசையமைப்பாளர் கருணாஸ்

0
573
karunas
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார். பின் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது கருணாஸ் அரசியலுக்கு போவதில்லை என்று பேசப்படுகிறது. தற்போது கருணாஸ் இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் தான் இயக்கும் ‘ஆதார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார். பின் கார்த்தி நடித்து வரும் விருமன் என்ற படத்திலும், சசிகுமாருடன் ஒரு படத்திலும் கருணாஸ் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சல்லியர்கள் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படி கருணாஸ் தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் இவர் அரசியல் பக்கமே செல்வதில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் இவரிடம் சமீபத்தில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது.

- Advertisement -

அரசியலை மிஸ் பண்றீங்களா:

இல்லவே இல்லைங்க, அரசியலுக்கு நான் விரும்பிப் போனதில்லை. பொதுவா இந்த ஹோட்டலில் சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று 10 பேர் சொல்வார்கள். சரி அங்க போய் சாப்பிட்டு பார்ப்போம் என்று நினைப்போம். போய் பார்த்ததும் அதை வாயிலேயே வைக்க முடியவில்லை என்று தெரிந்து. சரி அவ்வளவு தான். இக்கரைக்கு அக்கரை பச்சை தான் என்கிற மாதிரி. இக்கரையில் இருக்கிற பச்சை போல் தான் அக்கறை இருக்கு. இது தான் நான் அரசியலில் கற்றுக் கொண்டது.

அசுரன் படத்துக்குப்பிறகு உங்கள் பையன்னுக்கு நடிக்க வாய்ப்பு வந்து இருக்கா:

என் பையன் பட வாய்ப்புக்காக எந்த வேலையும் செய்ய மாட்டேன். சில ஹீரோக்களுக்கு அப்படி ஆகி இருக்கு. அவங்க அப்பா பெரிய இயக்குனர்கள் ஆக இருந்திருப்பார்கள். கதையை அவங்க கேட்டு நல்லா இல்லைன்னு சொல்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகி விடுகிறது. அதனால் அவர்கள் மனசு என்னவாகும்? அருமையான கதை கிடைத்து எங்க அப்பா தாண்டா கெடுத்துட்டான் என்று திட்டுவார்கள். அந்த திட்டத்தை நான் ஏன் வாங்கணும்? அதனால் என்ன கதை வருதோ? அதை நீயே கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டேன்.

-விளம்பரம்-

பிசியாக மாறிய மகன் :

உனக்குப் பிடித்திருந்தால் என்றால் அந்த கதையை நான் கேட்கிறேன் என்று சொல்வேன். இப்ப கென், தனுஷ் சாரிடம் ஒர்க் பண்றான். வீட்டில் என்னை கூட பார்த்து விடலாம். ஆனால், அவரைப் பார்க்கவே முடியல. இந்த வயதில் டைவர்ஷன் ஆகுறதுக்கு நிறைய வாய்ப்புகள் பறந்து கிடக்கிற இந்த உலகத்தில் அவருக்கு பிடித்த ஒரு விஷயத்தை மட்டுமே நோக்கி பயணம் பண்ணுகிறார் கென். என் பிள்ளை என்பதால் மட்டும் இதைச் சொல்லவில்லை. அந்த மாதிரி எல்லா பிள்ளைகளும் இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன்.

இசையமைப்பாளர் கருணாஸ் என்ன ஆனார்:

ஊர் கோயில், கல்யாண வீடு, காதுகுத்து, சாவு என நான் பாடின கானா காலங்களில் இருந்த சந்தோஷங்களை ரொம்பவே மிஸ் பண்றேன். நூறு சதவிகிதம் சந்தோசமாக சொல்றேன். அந்த கிராமிய பாடகர், கானா பாடகன் கருணாஸ் தனக்கு தெரிஞ்ச ஏதோ ஒரு டியூனை வைத்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்வான். 5 லட்ச ரூபாய்க்கும் கம்போஸ் பண்ணி இருக்கேன். கிரேஸ் எல்லாம் அங்க தான் அறிமுகமானார்கள். என் இசை குழுவில் இருந்து எத்தனையோ மியூசிஷியன்ஸ் உருவாக்கியிருக்கிறேன். அதையெல்லாம் மிஸ் பண்ணுகிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement