அப்பா, அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க – மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நடிகர் அப்புக்குட்டியின் ஏக்கம்

0
274
- Advertisement -

நடிகர் அப்புக்குட்டி தனது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘தம்பி மயில்வாகனம்’ என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அப்புக்குட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்புக்குட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் மம்மூட்டி நடிப்பில் வெளி வந்த ‘மறுமலர்ச்சி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் ஆனார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து பல படங்களில் அப்புக்குட்டி நடித்திருந்தார். மேலும், இவர் கதாநாயகனாக முதன் முதலாக ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதையும் வாங்கியது. கடைசியாக இவர் ‘வாழ்க விவசாயி’ என்ற படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயலும் நடிகர் அப்புக்குட்டி தனது வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

- Advertisement -

அப்புக்குட்டி பேட்டி:

அதில், முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு தேடினேன். கிட்டத்தட்ட 18 வருடங்கள் வாய்ப்பு தேடுறதுலேயே போயிடுச்சு. ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தின் மூலம்தான் எனக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதே மாதிரி ‘அழகர்சாமியின் குதிரை’. படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. மத்த வேலை பார்த்திருந்தா இந்தப் பேரும் புகழும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. என் காத்திருப்புக்கும் தேடலுக்கும் கிடைச்ச பரிசு தான் மக்களோடு அன்பு என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

திருமணம் குறித்து:

மேலும், நான் நிறைய வருஷமா பொண்ணு தேடிக்கிட்டே தான் இருக்கேன். சரியான பொண்ணும் அமைந்து வரல. நடுவுல கொஞ்சம் சினிமால பிஸியா இருந்ததால பொண்ணு தேடுறதை நிறுத்தி விட்டேன். இப்போ மீண்டும் எனக்கான துணையை தேடுகிறேன். நான் சினிமாக்காரன் என்பதால் பொண்ணு கொடுக்க கொஞ்சம் யோசிக்கிறாங்க அதுதான் கஷ்டமாக இருக்கு என்று வேதனையோடு அப்புக்குட்டி குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அப்பா அம்மா இருந்திருந்தால்:

பின் என்கிட்ட வாழ்க்கை நடத்துவதற்கான எல்லா பொருளாதார வசதிகளும் இருக்கு. ஆனா, பொண்ணு கிடைக்கல. அப்பா அம்மா உயிரோடு இருந்திருந்தாங்கன்னா இந்நேரம் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. சுசீந்திரன் சாரோட அப்பா கூட எனக்கு அக்கறையா ஒரு பொண்ணை பார்த்தாரு. ஆனா, பொண்ணு ரொம்ப சின்ன வயசா இருந்ததால நான் வேண்டாம் என்று சொல்லிட்டேன். இதனால எனக்கு நிறைய மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கு என்றார்.

தனது காதல் குறித்து:

நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது. முக்கியமா,எனக்கு வரதட்சணை வேண்டாம். அதே மாதிரி நான் நிறைய பேரை லவ் பண்ணி இருக்கேன். ஆனா, என்னை யாரும் லவ் பண்ணல. நான் லவ்வுன்னு சொன்னா கூட பொண்ணுங்க சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க. அதனால ‘லவ் எல்லாம் எனக்கு செட்டாகாது’ என்று சிறிய புன்னகையோடு குறிப்பிட்டு இருந்தார். தற்போது அப்புக்குட்டி, ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்னும் சமூக அக்கறையோடு மக்கள் பிரச்சனை பேசும் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement