பெரிய சம்பளம் கிடைக்கும்ன்னு போனேன், ஆனா இயக்குனர் ஏமாத்திட்டாரு – கலன் பட விழாவில் அப்புக்குட்டி சொன்னது

0
268
- Advertisement -

இயக்குனர் வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் படம் கலன். இவர் இதற்கு முன் கிடுகு என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் கலன் படத்தை ராமலட்சுமி ப்ரொடக்ஷன் மற்றும் அனுசியா பிலிம் ப்ரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அப்புகுட்டி, தீபா, யாசர், சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் பட குழுவினர் உடன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணி தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

கலன் பட விழாவில் அப்புக்குட்டி:

அப்போது விழாவில் நடிகர் அப்பு குட்டி, இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் மணிமாறன் தான். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் சொன்னவுடன் இயக்குனரை சந்தித்து பேசினேன். அவர் கதையை சொல்லும்போது ஒரு 30 நாளைக்கு எனக்கு வேலை இருக்கும் என்று நினைத்தேன். அதோடு பெரிய சம்பளம் கிடைக்கும், வீட்டு வேலைகளை இதை வைத்து முடித்து விடலாம் என்று நினைத்தேன்.

இயக்குனர் குறித்து சொன்னது:

பின் பெரிய எதிர்பார்ப்புடன் தான் நான் படப்பிடிப்புக்கு சென்றேன். ஆனால், எனக்கு இந்த படத்தில் ஆறு நாட்கள் மட்டும்தான் வேலை இருந்தது. அதையும் நாலு நாளிலேயே நான் நடிக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் எடுத்து முடித்து விட்டார். ஆனால், படம் முழுவதும் நான் இருக்கிறேன். அந்த அளவிற்கு இயக்குனர் திறமையாக எங்களை வைத்து வேலை செய்து இருக்கிறார். இந்த படத்தில் நான் யாசருக்கு தாய்மாமன் ஆக நடித்திருக்கிறேன்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

எனக்கு அக்காவாக தீபா நடித்திருக்கிறார். உண்மையில் எனக்கு அவர் தங்கை தான். ஆனால், அவர் அக்காவிடத்தில் நடித்திருக்கிறார். இதில் வேலை செய்தவர்கள் அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நானே சோர்வாக இருந்தாலும் வாங்க சார் என்று அழைத்து இயக்குனர் அவருக்கான காட்சிகளை முடித்து விடுவார். ஒரு கட்டத்தில் அவர் என்னை அடித்து விடுவாரோ என்றெல்லாம் பயந்தேன். அவர் ரொம்ப தைரியமான இயக்குனர். இது நல்ல படம். நிச்சயமாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

அப்புக்குட்டி குறித்த தகவல்:

‘தம்பி மயில்வாகனம்’ என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அப்புக்குட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்புக்குட்டியும் ஒருவர். இவருடைய பிரபலமான பெயர் சிவ பாலன். இவர் மம்மூட்டி நடிப்பில் வெளி வந்த ‘மறுமலர்ச்சி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் கதாநாயகனாக முதன் முதலாக ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருது வாங்கியது. கடைசியாக இவர் ‘வாழ்க விவசாயி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement