இலங்கையில் தன் மகள் முன்பு அசிங்கப்பட்ட அரவிந்த் சாமி.! ஹோட்டலில் நடந்தது என்ன..?

0
1407
Actor-Aravind-sami

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று பல நடிகர்களை அழைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பெயருக்கு முதன் முதலில் தகுதி உடையவராக இருந்வர் நடிகர் அரவிந்த் சாமி. தனது 21 வயதில் ‘தளபதி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது பல இளம் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.

aravindswamy

- Advertisement -

தளபதி படத்திற்கு பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் நடித்து வந்தார்.ஆனால், பெரும்பாலும் தமிழ் படங்களிலே கவனம் செலுத்தி நடித்து வந்த அரவிந்த் சாமி, நடுவில் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார். இதனால் சில காலம் படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

அதன் பின்னர் உடற்பயிற்சிகளை செய்து தனது உடலை பிட்டக மாற்றி சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தான் குண்டாக இருக்கும் போது தனது மகள் முன்னாள் யாரென்று தெரியாத ஒரு நபரால் கிண்டலுக்கு உள்ளானேன் என்று அரவிந் சாமி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Arvind Swamy

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த அவர்’ நான் ஒரு சமயம் எனது மகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது நான் மிகவும் குண்டாக இருந்தேன். ஒரு நாள் ஒரு உணவகத்தில் என்னுடைய மகளுடன் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் மகளிடம்’உன் அப்பாவை கம்மியாக சாப்பிட சொல்லு’ என்று கூறினார். அவர் அப்படி கூறியது எனக்கு ஓன்றும் பெரிதாக தெரிவில்லை. ஆனால், சின்ன பெண்ணாக இருந்த என் மகளுக்கு எப்படி இருந்திருக்கும். அதெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement