கவினின் டாடா, விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ள Twins – அட, இவங்க இந்த பிரபல நடிகரின் பிள்ளைகள் தானாம்.

0
1601
dada
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு சென்று தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் கவின். தற்போது இவர் நடித்துள்ள “டாடா” படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை கணேஷ் கே பாபு அறிமுக இயக்குனராக படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார். கவின் இப்படத்தில் மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணாதாஸ். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா ஐஸ்வர்யா லட்சிமி போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த “டாடா” படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

இப்படத்தில் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் ஊதாரியாக சுற்றும் ஒரு கல்லூரி மாணவராக மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் கவின் வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சிந்து என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி வருகிறார் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர் இந்த காதல் ஒரு கட்டத்தில் கர்ப்பமாக மாறுகிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் க்வின் திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே பொறுப்பில்லாமல் சுற்றுகிறார். இதனை பார்த்த சிந்து வருத்தமடைகிறார். இப்படி இருக்கும் நேரத்தில் ஒரு சண்டை வருகிறது.

- Advertisement -

அந்த சண்டையில் “நீ செத்துரு” என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கதாநாயகன். இப்படி செல்லும் நேரத்தில் சிந்துவிற்கு கர்ப்ப வலி வந்து மணிகண்டனுக்கு போன் செய்கிறார். இந்த அழைப்பை கண்டு கொள்ளாமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுக்கிறார். இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதனை மருத்துவமனையில் விட்டுவிட்டு சிந்து தன்னுடைய தாயின் வீட்டிற்கு செல்கிறார். இப்படி செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ளவும் மிகப்பெரிய பொறுப்பு மணிகண்டனிற்க்கு வருகிறது. இந்த நிலையில் குழந்தையை வளர்க்கும் மணிகண்டன் திருந்தினாரா? குழந்தையை நல்ல படியாக வளர்த்தார? மீண்டும் தன்னுடைய மனைவியை சந்தித்தாரா? என்பதுதான் மீதி கதை.

நடிகர் அர்ஜுனனின் மகன் :

இந்நிலையில் டாடா படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நல்ல வசூலையும் பெற்று வருகிறது. மேலும் டாடா படத்தின் கதாநாயகன் கவினை கமல்ஹசன் முதற்கொண்டு பல பிரபலங்களும் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் தான் இந்த படத்தில் நடிகர் கவினுடைய மகனாக நடித்த இலன் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனின் மகன் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அதனை நடிகர் அர்ஜுனனும் ஒப்புக்கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

தளபதி 67 படத்தில் மகள் :

மேலும் நடிகர் அர்ஜுனின் மகள் இயல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் தளபதி 67 லியோ படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவலை நடிகர் அர்ஜுனன் அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் சில புகைப்படத்தை பகிர்ந்து அந்த தகவலை உறுதி செய்து இருந்தார். மேலும் அர்ஜுனனின் மகள் இயலும் மகன் இலனும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த தகவல் வைரலாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் நடிகர் அர்ஜுனனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement