வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்த அருண் விஜய்..!ஆர்வத்தால் நேர்ந்த விபரீதம்..!

0
1246
Arunvijay

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

பின்னர் இவரது நடிப்பில் வெளியான “தடையறதாக்க” திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு திருப்பு முனை படமாக அமைந்திருந்தது.மேலும், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.

அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

Arunvijayinjured

தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள அதிக நேரம் உடற்பயிற்சி கூடத்திலேயே கழித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உடல்பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் அருண் விஜய்க்கு பாதம் மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது இதனால் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.