பணத்துக்காக ஹீரோகிட்ட அடிவாங்க நான் சினிமாவுக்கு வரல.! பிரபல நடிகர் அதிரடி முடிவு.!

0
2176
Actor-Arun-vijay
- Advertisement -

திரைப்பட நடிகரின் வாரிசு, சினிமாவுக்குத் தேவையான நடனம், சண்டை பயிற்சி, அமெரிக்கா சென்று சினிமா படிப்பு கற்றது என்று அருண் விஜய்க்குப் பல திறமைகள் இருந்தும், தமிழ் சினிமாவில் இன்னும் அவருக்கான ஓர் இடம் அமையவில்லை. `பாண்டவர் பூமி’யில் பாந்தமான வேடம், `என்னை அறிந்தால்’ படத்தில் வித்தியாசமான வில்லன், `குற்றம் 23′ திரைப்படத்தில் புலனாய்வு போலீஸ் என்று நடிப்பில் பன்முக முத்திரை பதித்தாலும், இன்னும் தன் இருப்பைத் தக்கவைக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.

-விளம்பரம்-

Actor Arun vijay

- Advertisement -

தெலுங்கு, இந்தியில் உருவாகிக்கொண்டிருக்கும் `தாகம்’ படத்தில் பிரபாஸுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தவிர, `தடையற தாக்க’ படத்தில் இணைந்து மிரட்டிய அருண்விஜய் – மகிழ்திருமேனி கூட்டணி இப்போது `தடம்’ படத்தில் இணைந்திருக்கிறது. அருண் விஜய்யிடம் பேசினோம்.

முதல் படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, இப்போதுவரை படங்களை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் ரொம்பத் தெளிவு. எனக்கான இமேஜை அப்போதே உருவாக்கிக் கொண்டேன். அவ்வப்போது காதல் படங்களில் நடித்தாலும், ஆக்‌ஷன் படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருந்தேன், இருக்கிறேன். முதன்முதலில் அறிமுகமான `ப்ரியம்’ ஆக்‌ஷன் திரைப்படம். அடுத்தடுத்து எனக்கான கதைகளைத் தேர்வு செய்யும் பக்குவம் அப்போது இல்லாததால், அடுத்து `கங்கா கெளரி’ என்ற காமெடி படத்தில் நடித்தேன்.

-விளம்பரம்-

Arun vijay

அஜித்துக்குப் பிறகு வேறு படங்களில் வில்லனாக நடிக்காதது ஏன்?”

“அதுக்குப் பிறகு இப்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகினார்கள். பெரிய அளவு சம்பளம் தருவதாகவும் சொன்னார்கள். எதுவும் `என்னை அறிந்தால்’ விக்டர் கதாபாத்திரம் அளவுக்குக் கனமாக இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். தவிர, பணத்துக்காகச் சொதப்பலான கேரக்டர்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவுக்கு வரவில்லை.

முன்பு சிவாஜி சார் மகன் பிரபுவும், முத்துராமன் சார் கார்த்திக்கும் சினிமாவுக்கு அறிமுகமானபோது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை அவர்களும் தைரியமாக எதிர்கொண்டார்கள். இப்போது சிவகுமார் சார் மகன் சூர்யாவும், பிரபு சார் மகன் விக்ரமும், கார்த்திக் சார் மகன் கெளதம், நான்… உள்ளிட்ட அனைவரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

Arun Vijay and father Vijayakumar

சினிமாவில் எனக்கான தனி அடையாளத்தைக் கொண்டுவர இரண்டு மடங்கு உழைப்பைத் தரவேண்டியிருக்கிறது. நான் கல்லூரியில் சேர்ந்ததும் நடிக்க வந்துவிட்டேன். கல்வியில் என்னைவிட சீனியரான சூர்யா, சினிமாவில் எனக்குப் பிறகுதான் நடிக்க வந்தார்.

Advertisement