தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான “தடையறதாக்க” திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு திருப்பு முனை படமாக அமைந்திருந்தது.
மேலும், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். மேலும், அதிக நேரம் உடற்பயிற்சி கூடத்திலேயே கழித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் இரவு வேலையில் ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இரவு பகல் என்றும் பாராமல் கடினமாக உடற் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அருண் விஜய் எவ்வாறு உடற் பயிற்சி செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.