நடிகர்களுக்கு எல்லாம் லாக்டவுன் கிடையாதா ? அப்படி என்ன ஸ்பெசல் இவங்க – கடுப்பான நெட்டிசன்கள்.

0
1860
arya

உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் தலை விரித்து ஆடி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியிலும், கவலையிலும் உள்ளார்கள். கொரோனா பரவலை தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் ஜீலை 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் மருத்துவ தேவைகள், அத்தியாவசிய மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடிகர் ஆர்யா அவர்கள் தன்னுடைய பயிற்சியாளருடன் ரன்னிங் சென்றுள்ளார் .

- Advertisement -

தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார் ஆர்யா. அண்ணாநகர், ஜமாலியா, ஐ.சி.எப் உள்ளிட்ட பகுதிகளில் யாரும் வெளியில் வரக்கூடாது என்று விதிகளை போட்டும் ஆர்யா மீறி சென்றுள்ளார். சுமார் 2 மணி நேரம் ஜாக்கிங் சென்றதாக டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் நடிகர் ஆர்யா வெற்றி குறியை பதிவு செய்துள்ளார்.

இப்படி விதி மீறியவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் சாலை, பூங்காக்களில் நடைபயிற்சி செல்ல தடை உள்ளது. எனவே, நடைபயிற்சி உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது. இதனால் நடிகர் ஆர்யா மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-விளம்பரம்-
Advertisement