எனக்கு இப்படி மனைவி இருந்தா போதும். அதர்வாவின் ஆசை. வீடியோ இதோ.

0
1938
atharva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முரளியும் ஒருவர். சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் முரளி.பூ விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து இவர் புதுவசந்தம், இதயம், அதர்மம், பொற்காலம், தினந்தோறும் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தன்னுடைய மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் கூட முரளி அவர்கள் ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய கடைசி படம். நடிகர் முரளி அவர்கள் 2010 ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். முரளி மகன் என்பதை தாண்டி நடிகர் அதர்வா தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் அதர்வாவிற்கு ஆண்களை விட பெண்கள் ரசிகர்கள் தான் அதிகம் என்று சொல்லலாம். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதர்வா தனக்கு வரப்போகும் மனைவி குறித்து பேசியுள்ளார். அதில், உங்களுக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும்? அழகாகவா? செக்சியாகவா? என்று கேள்வியை கேட்டார் டிடி. இதற்கு பதிலளித்த அவர் எனக்கு வரப்போகும் மனைவி பர்சனாலிட்டியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை நன்றாக பேசணும் அனுபவம் என்று கூறியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அதர்வா, இறுதியாக 100 படத்தில் நடித்திருந்தார். தற்போது குருதியாட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் அதர்வா நடிப்பில் பல படங்கள் வெளியாக காத்துக்கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement