அதர்வாவிற்கு விரைவில் காதல் திருமணம் – நண்பர்கள் வட்டாரம் சொன்ன தகவல்.

0
1462
atharva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முரளியும் ஒருவர். சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் முரளி.பூ விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து இவர் புதுவசந்தம், இதயம், அதர்மம், பொற்காலம், தினந்தோறும் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.தன்னுடைய மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் கூட முரளி அவர்கள் ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய கடைசி படம்.

-விளம்பரம்-
அதர்வா

நடிகர் முரளி அவர்கள் 2010 ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். முரளி மகன் என்பதை தாண்டி நடிகர் அதர்வா தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.நடிகர் அதர்வாவிற்கு ஆண்களை விட பெண்கள் ரசிகர்கள் தான் அதிகம் என்று சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் நடிகர் அதர்வாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அதர்வாவின் இளைய சகோதரர் ஆகாஷிற்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆகாஷ்- சிநேகா இருவரும் வெளிநாட்டில், ஒன்றாகப் படித்த போது காதலித்தவர்கள். ‘கோவிட்’ ஊரடங்குக் காரணமாக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையின் ரிசார்ட் ஒன்றில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது. ஆகாஷ் திருமணம் செய்துகொண்ட ஸ்னேகா, விஜய்யின் மாமாவும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அதர்வாவிற்கு விரைவில் திருமணம், அதுவும் அவர் காதலித்து வரும் பெண்ணுடனே திருமணம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.

அதர்வா சகோதரர்

இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது ‘அதர்வாவிற்ரக்கும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறது. இருவீட்டார் சம்மதம் பெற்ற பிறகே இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியாக இருந்து வந்தார்கள். ஆனால், இரு வீட்டார் சம்மதம் தாமதம் ஆனதால் அதர்வாவின் தம்பி திருமணம் முன்கூட்டியே முடிந்து விட்டது. தற்போது தம்பிக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதால் தன்னுடைய திருமணம் குறித்து முடிவெடுக்க வீட்டில் கேட்டிருக்கிறார். அவர்களது அம்மாவும் சம்மதித்து விட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஜனவரி மாதத்திற்கு மேல் அதர்வாவின் திருமணம் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement