தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் முரளி. இவருடைய மகன் தான் அதர்வா. அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அதர்வா ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது உள்ள ட்ரெண்டிங் ஹீரோக்களில் அதர்வாவும் ஒருவர். இந்நிலையில் அதர்வாவும் தளபதி விஜய் அவர்களும் உறவினர்களாக ஆக போகிறார். இது குறித்து பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி என்பவர் நடிகர் விஜய் அவர்களின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணை காதலிக்கிறார். விஜய்யின் உறவுக்காரர் பெண்ணின் பெயர் சினேகா பிரிட்டோ. இவர் சிங்கப்பூரில் எம்.பி.ஏ. படித்து உள்ளார். இந்தப் பெண் விஜயின் அத்தை மகள். அதாவது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் தங்கை மகள் ஆவார். மேலும், சினேகா பிரிட்டோ அவர்கள் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார்.
இதையும் பாருங்க : மத்தவங்கள மாதிரி மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன் – வனிதாவை வெளுத்து வாங்கிய கவின் பட தயாரிப்பாளர் ரவீந்திரன்.
இவர்களின் காதலுக்கு முதலில் இரு வீட்டார் பெற்றோர்கள் மத்தியிலும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். காரணம் இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான். இருந்தாலும் ஆகாசும், சினேகா பிரிட்டோவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.
அதன்படி ஆகாசுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தை சினேகாவின் தந்தை பிரிட்டோ தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.