தன்னுடைய திருமணம் குறித்து நடிகர் பாலா மற்றும் அவரது மனைவி கோகிலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார்.
பெண்ணின் இடைவெளிக்குப் பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் தமிழில் தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோட இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார். பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார்.
பாலா திருமணம்:
அதன் பின் மருத்துவரான எல்சபெத் என்பவரை பாலா திருமணம் செய்து மீண்டும் விவாகரத்து பெற்றார். பின்னணியில் தான் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பல மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு நடிகர் பாலா அளித்த பேட்டியில், கோகிலாவின் அன்பால் என்னுடைய உடல்நலம் நன்றாகவே இருக்கிறது.
பாலா பேட்டி:
கோகிலாவோட அன்பால என்னோட உடல்நலம் ரொம்பவே சூப்பரா இருக்கு. பழைய மாதிரி படங்களில் பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். கோகிலா தான் இனிமே என் வாழ்க்கை. சின்ன வயசுல இருந்தே ஒன் சைடா என்னை லவ் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா. ஆனா, அது எனக்கு தெரியாது. அவ என் சொந்த தாய்மாமா பொண்ணுதான். ஒரு நாள் வீடியோ காலில் பேசும்போது, எனக்குன்னு யாரும் இல்லமா என்று சொன்னேன். உடனே, அவ பார்த்துகிட்டு இருந்த பெரிய வேலையை தூக்கி போட்டுவிட்டு திருவண்ணாமலையில் இருந்து என்னை பார்த்துக்க ஓடி வந்து விட்டா என்று பாலா கூறியுள்ளார்.
பாலா மனைவி கோகிலா:
அதனைத் தொடர்ந்து கோகிலா, பாலா மாமாவை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். ரொம்ப நேர்மையா இருப்பாரு. தப்புனா வெளிப்படையா பேசி தட்டி கேட்பாரு. அவருடைய அதிரடியான குணங்கள் எனக்கு பிடிக்கும். எல்லாருக்கும் உதவி பண்ணுவாரு. அதனால, அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவருக்காக, நான் யாரையும் கல்யாணம் கூட பண்ணிக்கல. பிறகு அவருக்கு திருமணம் ஆனது தெரிஞ்சதும் நான் அவர்கிட்ட ஃபிரண்ட்லியா தான் பேசுவேன். எந்த தப்பான நோக்கத்தோடும் நான் அவர்கிட்ட பேசுனது இல்லை.
ரொம்ப சந்தோஷமா இருக்கிறது:
ஒருமுறை மாமா கிட்ட பேசும்போது, எனக்குன்னு யாருமே இல்லைன்னு சொன்னப்பதான், இந்த நேரத்துல கண்டிப்பா அவர் கூட இருக்கணும்னு சொல்லிட்டு என் வேலையை விட்டுட்டு அவரைப் பார்க்க போயிட்டேன். உண்மைய சொல்லணும்னா அவரை நான் பார்ப்பதற்கு போனா, அவர்தான் என்னை பார்த்துக்கிட்டார். எனக்கு சமைத்து கொடுக்கிறது,கேர் பண்றதுன்னு ரொம்ப ரொம்ப நல்லா பாத்துகிட்டார். அப்புறம்தான் மாமா மேல இருக்கிற காதலைப் பற்றி அத்தை கிட்ட சொன்னேன். அவங்க ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அவங்களோட ஆசிர்வாதத்தோடு எங்க திருமணம் நடந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்று பூரிப்போடு கூறியுள்ளார் .