அட, கொடுமையே போன மாசம் மாமா, இந்த மாசம் இவர் – பால சரவணன் குடும்பத்தில் கொடுமை செய்த கொரோனா.

0
1506
bala
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .

-விளம்பரம்-
bala_saravanan_father

பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் மாறன், ஜோக்கர் துளசி, ஆட்டோகிராப் கோமகன், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனா தொற்றால் காலமாகி இருக்கிறார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகமான நடிகர் பாலசரவணன். தமிழில் குட்டி புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது. அதை தொடர்ந்து டார்லிங், வேதாளம், ஈஸ்வரன் என்று பல படங்களில் நடித்து இருந்தார். பாலசரவணனின் தந்தை எஸ்ஏ ரங்கநாதன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

Image

இதனையடுத்து திரையுலகினர் பாலசரவணன் குடும்பத்திற்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர். கடந்த மாதம் தான் பாலசரவணனின் தங்கை கணவர் கொரோனா தொற்றால் காலமாகி இருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்த அவர், “அன்பு நண்பர்களே. இன்று எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவுகூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவுசெய்து முகக்கவசம் அணிவீர்” என்று உருக்கமுடன் பேசி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement