எங்களை வாழ விடுங்கள், அவங்களுக்கு மருத்துவ உதவி சேவை – முன்னாள் மனைவி மீது புகார் அளித்த பாலா மற்றும் அவர் மனைவி

0
137
- Advertisement -

தன்னுடைய முன்னாள் மனைவியின் மீது நடிகர் பாலா கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

பாலா குறித்த தகவல்:

அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். பின் இவர் மருத்துவரான எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருந்தார்.

பாலா திருமணங்கள்:

அதன் பின் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து சில பேசி இருந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா வீடியோ போட்டு இருந்தார். அதற்கு பின் பாலா முதல் மனைவி அம்ருதா, பாலா மீது புகார் அளித்து இருந்தார். இதை அடுத்து கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா மணந்தார்.

-விளம்பரம்-

பாலா வீடியோ:

இன்னொரு பக்கம், கடந்த சில மாதங்களாகவே பாலாவின் முன்னாள் மனைவிகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பாலாவும் அவருடைய மனைவி கோகிலாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் பாலா, என்னையும் கோகிலாவையும் தனியாக விட்டு விடுங்கள். அன்புள்ள எலிசபெத் மற்றும் குடும்பத்தினருக்கு, நான் எலிசபெத்தை உண்மையாகத்தான் நேசித்தேன். அவருடைய குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் எலிசபெத்துக்கு தற்போது தேவைப்படுவது மருத்துவ உதவி தான். சமூக ஊடகம் கிடையாது.

கோகிலா சொன்னது:

அவரது குடும்பத்தில் நான் ஒரு மருத்துவராக இருந்திருந்தால் அவருக்கு சரியான கவனிப்பு கொடுத்திருப்பேன். அதை ஏன் அவருடைய அண்ணன், அம்மா செய்வதில்லை? நான் செய்யாத ஒரு குற்றத்திற்காக என் மீது பொய்யாக புகார் கொடுக்கிறார்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இல்லையென்றால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து கோகிலா, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்கள். எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது. நீங்கள் 15 வருடங்களாக மருந்து சாப்பிட்டீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். எங்களை வாழவிடுங்கள், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பேசி இருக்கிறார். இதை அடுத்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்த எலிசபத் மீது கொச்சியில் உள்ள கமிஷனரில் அலுவலகத்தில் பாலா மற்றும் அவருடைய மனைவி புகார் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement