தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்ற பல படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு சினிமாவில் நுழைந்த சில ஆண்டுகளில் உடல் எடை கூட சற்று பருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. அதன் பின் இவர் கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாக மாறி விட்டார்.
பின் குடும்ப பிரச்சினை காரணமாக சில காலமாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த அஞ்சலி மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் ஜேஞ்சேர் படத்தில் அஞ்சலி நடித்து இருக்கிறார். அதனை அடுத்து அஞ்சலி படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் ஃபால். இதில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படம்:
தற்போது அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி. இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கிருஷ்ணா சைதன்யா எழுதி இயக்கி இருக்கிறார். நேஹா ஷெட்டி, அஞ்சலி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தினுடைய ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றிருக்கிறது. இதில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டிருந்தார்.
பாலகிருஷ்ணா செய்த வேலை:
அப்போது மேடையில் படக்குழுவினர் எல்லோருமே நிற்கும் போது பாலகிருஷ்ணா தள்ளி நிற்க சொல்லி இருக்கிறார். எல்லோரும் கொஞ்சம் மெதுவாக நகர்ந்து இருக்கிறார்கள். உடனே வேகமாக அவர் அஞ்சலியை மேடையிலேயே தள்ளி இருக்கிறார். அஞ்சலியும் சிரித்துக் கொண்டு அதை சமாளித்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும் பாலகிருஷ்ணா செயலை கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பாடகி சின்மயி சோசியல் மீடியாவில், அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள்.
One of the biggest problems that I notice from people sharing this
— Chinmayi Sripaada (@Chinmayi) May 30, 2024
“Look at her laughing. She should have _____”
1. It is NOT possible to respond according to your spectator response as you watch this on your device. This most moral policing, holier than thou – pure as driven… https://t.co/nzTOlGJm0J
சின்மயி பதிவு:
அவள் சிரிப்பதைப் பாருங்கள். அவளுக்கு _‘ இருக்க வேண்டும்.
- உங்கள் பார்வையாளர்களின் பதிலின் படி பதிலளிக்க முடியாது. இதை உங்கள் பார்வையில் இருந்து நீங்கள் பாருங்கள். உங்களை விட புனிதமானது. புதிதாக விழுந்த பனி போன்ற தூய்மையானது. ஆனால் ஹரிச்சந்திரா / ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி அல்லது அவர்களது உறவினர்கள் இதை புரிந்து கொள்ளத் தவறிவிடுவார்கள்.
- தவறாக நடந்துகொள்ளும் ஆண்களை அதிகாரத்தில் அமர்த்த சமூகமே மறுக்கிறது. அவர்கள் பணம், சாதி மற்றும் அரசியல் பலத்தால் வந்தவர்கள். பெறுவதற்கும், இழப்பதற்கும் எதுவும் கிடையாது. பெண்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வந்து சொல்லாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இதைப் பார்த்த நெட்டிசன்கள், கொடூரமான மனிதாபிமானமற்ற மனிதர்கள் பல சகாப்தங்களே இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய செயல்களுக்கான விளைவுகளை எப்போது எதிர்கொள்வார்கள்? பாலகிருஷ்ணாவின் இந்த செயலால் அவர் அஞ்சலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாலகிருஷ்ணாவை திட்டி அஞ்சலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.