வித்தியாசமான கதாப்பாத்திறத்தில் தோன்றும் 2 நடிகர்கள் ! யார் இவர்கள்.? புகைப்படம் உள்ளே!

0
1083
Actor-bharath

நடிகர் கமல், பிக் பாஸ்-2 வீட்டுக்குள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. இன்று ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு, கடந்த இரண்டு வாரங்களாகவே புரொமோ, புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹைப்பை உருவாக்கிவருகிறது விஜய் டி.வி.

kamal

- Advertisement -

தற்போது, பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் நிற்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இவை ஒருபுறம் இருக்க, பிக் பாஸ் 2-வில் பங்குபெறப்போகும் போட்டியாளர்களின் பெயரைக் கண்டறியவே புலனாய்வு குழுக்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன. மக்களும் போட்டியாளர்களின் பெயரைத் தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீஸன் 2-வில் பங்குபெறப்போகும் 15 பேரில் நடிகை மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா பாலாஜி, பவர் ஸ்டார் சீனிவாசன், ஜனனி ஐயர், தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மமதி சாரி ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று ,மேலும் இருவரின் பெயர்கள் கசிந்துள்ளன.

-விளம்பரம்-

bharath

நடிகர் பரத் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வசிக்கப்போவதாக விஜய் டிவி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. பரத், டேனியல் இருவருமே வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து நடிப்பவர்கள். இவர்கள் இருவரும் பிக் பாஸின் வித்தியாசமான டாஸ்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை பொறுந்திருந்து பார்க்கலாம்!

Advertisement