நடிகர் பாரத்திற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது..! அவரே வெளியிட்ட ஆதாரம்.!

0
535
Bharath

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத். அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெஸ்லி ஒரு பல்மருத்துவர் என்பதும் குறிப்படத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று நடிகர் பரத்தின் மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. முதல் குழந்தையே இரட்டை பிறவி என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் பரத். இந்த மகிழ்ச்சியான தகவலை தனது சமூக தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார் நடிகர் பரத்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ள நடிகர் பரத்,

-விளம்பரம்-

‘மகிழ்ச்சியின் இரண்டு புதிய பண்டல்கள்
இரண்டு விலைமதிப்பற்ற பிள்ளைகள்
நானும், ஜெஸ்ஸியும் இரட்டிப்பாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்
தாய் மற்றும் குழந்தைகளும் நலம்.அனைவரின் அன்பிற்கும் நன்றி’

என்று ட்வீட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகர்களிலே, நடிகர் பரத் தான் இரட்டை குழந்தையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலால் நடிகர் பரத்தின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

Advertisement