ப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் ! திசை மாறிய பாதை

0
5530
Actor bharath
- Advertisement -

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய்-சூரியா நடிப்பில் வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் சின்ன வயது விஜயாக ஒருவர் நடித்தருப்பார். அவரது பெயர் ஜெயந்த், அவர் அந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

-விளம்பரம்-

bharath

- Advertisement -

அதன்பின்னர் வளர்ந்துவிட்ட அவருக்கு கைகொடுக்க ஆள் இல்லை. தட்டு தடுமாறி படித்து முடித்த அவர், நடிப்பில் உள்ள ஆர்வத்தினால் தன்னுடைய பல ஆல்பங்களை எடுத்து சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பினார். ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.

இப்படி ஒரு போராட்ட வாழ்வை துவங்கிய ஜெயந்துக்கு அவரது வாழ்க்கையில் மேலும் ஒரு இடி விழுந்தது. அவரது அம்மா திடீரென இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெயந்த் பலகாலம் தனது பணியில் ஒருமுகம் இல்லாமல் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

bharath-actor

ஒரு சில ஷார்ட் பிலிமில் மட்டுமே நடித்துள்ள அவர், வேறு வழியின்றி இயக்குனர் பாதையில் திரும்பியுள்ளார். ஜெயந்தின் நண்பர் அஜய், இமைக்கா நொடிகள் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துணை இயக்குனராக வேலை செய்து வருகிறார் குட்டி விஜய் ஜெயந்த்.

Advertisement