சென்னை சாவேரா ஹோட்டலில் ‘பிக் பிட்ச்சர்’ (Big Pitchure) ரியாலிட்டி ஷோவின் உடைய அறிமுக விழா நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியினுடைய தமிழ் பதிப்பை நடிகர் பரத் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா மற்றும் இந்தியில் விஜய் ராஸ் ஆகியோர் தான் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் பரத், அனைத்து வயதுக்கும் ஏற்ற வகையில் இந்த நிகழ்ச்சி உள்ளது. திறமையும் வாய்ப்பு ஒன்றாக இணையும் இடமாகத் தான் பிக் பிட்ச்சர் இருக்கிறது.
பிக் பிட்ச்சர் நிகழ்ச்சி:
திறமையை வெளிக்காட்ட ஒரு சரியான மேடை தான் இது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டும் கிடையாது. இரண்டு மணி நேரம் நம்மை எல்லாவற்றையும் மறக்க செய்து சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய ஒரு உலகம். ஆனால், அந்த சினிமா எப்படி உருவாகிறது, அதன் பின்னணியில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதை காட்டும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி.

பரத் பேசியது:
அந்த மேக்கிங் செயல்முறையை பார்ப்பதன் மூலம் சினிமாவினுடைய உண்மையான சுவாரசியத்தை மக்கள் உணர முடியும், தெரிந்து கொள்ள முடியும். அதுவே இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய முக்கிய காரணம். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு போலவே இதற்கும் கிடைக்கும்.
https://www.youtube.com/watch?v=K8PqFAXcBqs
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
முக்கியமாக சினிமா அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனால் சினிமாவில் ஆர்வம் உள்ளவர்களும், சாதாரண மக்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடிக்கும். இது ஒரு புதுமையான முயற்சி. சினிமாவில் பல விஷயங்களை செய்து பார்த்த பிறகு இந்த மாதிரியான ஒரு ரியாலிட்டி ஷோ எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். இது கண்டிப்பாக பேன் இந்திய அளவில் வெற்றி பெறும். சினிமா உருவாகும் பின்னணியை மக்களுக்கு நேரடியாக காட்டுவது இதனுடைய முக்கிய நோக்கம் என்று கூறியிருக்கிறார்.






