டெய்லி அவனுக்கு 200 ரூபா கொடுத்தேன், ஆனா சூரி வளர்ந்து வந்ததுக்கு அப்புறம் – போண்டாமணி மணி வேதனை.

0
1230
Soori
- Advertisement -

என் வீட்டில் சாப்பிட்ட நன்றி கூட நடிகர் சூரிக்கு இல்லை என்று கொந்தளிப்பில் நடிகர் போண்டாமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சூரி அவர்கள் தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அது போல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தில் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் சூரியை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் போண்டாமணி சூரியை விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

போண்டா மணி அளித்த பேட்டி:

அதாவது, சமீபத்தில் நடிகர் போண்டா மணி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு உடம்பு இப்போது கொஞ்சம் பரவாயில்லை. டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு கிட்னி கொடுத்து உதவ சொந்தம் பந்தம் கூட யாரும் இங்கு இல்லை. நான் இலங்கைக்காரன் என்பதால் அரசு விதிகள் நிறைய இருக்கிறது. சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் சூரி என்னுடைய வீட்டில் தான் தங்கி சாப்பிட்டு இருந்தார்.

சூரி குறித்து சொன்னது:

ஆனால், என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போனவுடன் அவர் ஒரு போன் கூட செய்து விசாரிக்கவில்லை. இது எனக்கு வேதனையை அளித்தது. ஆனால், என்னுடன் நடிக்காத விஜய் சேதுபதி எனக்கு உதவி செய்திருந்தார். அந்த மனது கூட சூரிக்கு வரவில்லை. காதல் படத்தில் நடித்த சுகுமார் தான் சூரியை தினமும் நான் நடத்தும் நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார். அப்போது அவருக்கு தினமும் நான் 200 ரூபாய் கொடுப்பேன். ஆனால், சூரி சினிமா துறையில் நல்ல இடத்தை பிடித்த பிறகு என்னை கண்டு கொள்ளவே இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement