நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் விவாகரத்து குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கும் விஷயங்கள்தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு அந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது. மேலும், இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் கிடைத்தது. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

மேலும், இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான 'சார்' படத்தையும் இயக்கி இருந்தார். இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போஸ் வெங்கட், சமுதாயத்தில் அதிகரித்து வரும் விவாகரத்து குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தேவையானதை செலக்ட் செய்யணும்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், விவாகரத்து என்பது வாழ்க்கைக்கு அவசியம் இல்லாத ஒன்று. நமக்கு பொருத்தமானத நம்ம செலக்ட் பண்ணனும். நமக்கு புல்லட் சாய்த்து பிடிக்கிற அளவுக்கு திறமை இல்லை, ஆக்டிவ்வா தான் வசதி. ஆனா, நம்மகிட்ட புல்லட் வாங்க காசு இருந்தாலும், நம்ம பயணத்துக்கு எது தேவையோ அதை அறிந்து நாம் வண்டி வாங்கணும். கொஞ்ச நேரம் பயணம் பண்ற வண்டிக்கே நாம் இதை பார்க்கும்போது, வாழ்க்கை முழுவதும் பயணம் பண்ண நம்ம எல்லாத்தையும் பார்க்க வேண்டும்.

தகுந்த மாதிரி மாத்திக்கணும்:
அப்புறம் காசு அதிகமா இருக்குன்னு புல்லட்டை வாங்கிட்டு, அப்புறம் அது சரி இல்ல, இது சரி இல்லன்னு விக்கிற மாதிரி தான் இப்போ நம்ம நாட்டுல டைவர்ஸ் நடந்துட்டு இருக்கு. அதனால்தான் நமக்கு எது தேவையோ எது பொருத்தமானதோ அதை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை பொருத்தம் இல்லாதது அமைஞ்சிட்டா அதுக்கு ஏத்த மாதிரி நம்மளை மாத்திக்கணும். தெரியாம புல்லட் வாங்கிட்டேன்னு அதை நம்ம விக்கலாம். ஆனால், திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண்ணையோ, பையனையோ அப்படி செய்தால் அது பெரிய பாவம்.
டைவர்ஸ்க்கு காரணம் இதுதான்:
வாழனும்னு நினைத்தால் அனைவரும் வாழலாம். ரெண்டு பேருக்குள்ள ஒத்து வரலனா இப்ப பிரிஞ்சிடுறாங்க. இங்க நியாயமான பிரச்சனைகள் நிறைய இருக்கு. வெளிநாடுகளில், வாய் நாற்றமும் உடல் நாற்றமும் தான் அதிகபட்சமான டைவர்ஸ்க்கு காரணம். ஆனா, நம்ம ஊர்ல தேவைக்கு திருமணம் செய்துவிட்டு, அப்புறம் தேவை முடிந்தவுடன் டைவர்ஸ் வாங்குறாங்க. அதில் ஒரு அர்த்தமே இல்லை. முதல்ல ஒரு திருமணம் பண்ணிட்டு ஒரு பெண், குடும்பம், குழந்தைகள் வந்தா, அவங்களோட நேரம் செலவழிக்க முடியல. ஆனால் அதுக்குள்ள அடுத்த திருமணத்திற்கு போயிடுறாங்க.

அவங்களுக்கெல்லாம் மேனியா:
இப்பல்லாம் டைவர்ஸ் பண்றது ஒரு மேனியா ஆயிடுச்சு. எனக்கு தெரிஞ்ச ஒருவர் வீட்டில் சண்டை வந்தா தோத்துப் போயிடுனு சொல்லுவாரு. உன் மனைவி ரொம்ப சண்டை போட்டு வாதம் பண்ணுனா அவங்கள ஜெயிக்க விட்டுடுடா என்பார். நான் அதை பண்னேன். அதனால்தான் என் குடும்பத்தில் சண்டை எல்லாம் குறைந்தது. ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்காக சண்டை போட ஆரம்பிச்சா அது வீட்ல எல்லாரையும் பாதிக்கும். எதையும் எளிமையா முடிக்கிற பக்குவம் நமக்கு இருக்கணும். இதையெல்லாம் செய்ய தவறிட்டோம்னா டைவர்ஸ் உள்ளே வர காரணமாகிவிடும் என்று போஸ் வெங்கட் கூறியிருக்கிறார்.






