‘பாய் போய் வாங்க திரும்பவும் இங்கே வராதீங்கனு சொன்னார்’ – இறுதி காலத்தில் சந்திரபாபுவுடன் சிகிச்சை எடுத்த நபர் சொன்ன கதை.

0
589
chandrababu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சந்திரபாபு. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம்,நடிகர், இயக்குனர், சிற்பம் என அனைத்திலும் திறமை கொண்ட அற்புதமான கலைஞனாக விளங்கி இருந்தவர். இவருடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இவருடைய குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. இவர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தன அமராவதி என்ற படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 1974ஆம் ஆண்டு குடிப்பழக்கம் மற்றும் மஞ்சள்காமாலை காரணமாக இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் இருந்த போது அவருடைய வார்டில் சிகிச்சை பெற்று வந்த முகமது உமர் என்பவர் பத்திரிக்கை ஒன்றில் முக்கியமான அங்கு நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

எதிர் காட்டில் சாரி :

அவர் கூறுகையில் `மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சந்திரபாபு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு எதிர் கட்டிலில் சாரி என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். சாரி எம்போதுமே ஜூஸ் குடித்தாலும் சந்திரபாபுவிடம் முதுகை காட்டித்தான் குடிப்பர். அப்போது ஒருவர் பார்க்க வந்தார். அவரிடம் சந்திரபாபு வெறும் கையில் ஏன் வந்தீர்கள் போண்டா வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே. அவர் தான் சாப்பிட்டு கொண்டே இருக்கிறாரே எனக் கூற சாரி அதற்கு பிறகு முதுகை திரும்பி குடிக்கவில்லை.

பேசாமலேயே டாக்டரை சிரிக்க வைத்தார் :

பின்னர் சந்திரபாபுவை பரிசோதிக்க வந்த டாக்டரிடம் சில சேட்டைகளை செய்தார். அப்போது டாக்டர் உடலில் என்ன செய்கிறது? என கேட்க ஜாடையாக கைகளை அசைத்து கூற டாக்டர் நீ இப்ப சொல்லவில்லை என்றால் நான் உன்னை மருத்துவமனையில் இருந்து வெளியில் அனுப்பி விடுவேன் என்று கூறி கோபத்தோடு சென்று விட்டார். ஆனால் மீண்டும் டாக்டர்! என அழைத்த சந்திரபாபு மீண்டும் இப்படியே சில முறைகள் செய்ய டாக்டருக்கு சிரிப்பு வந்து விட்டது. அதற்கு பிறகு சந்திரபாபு சிரித்துக்கொண்டே தனக்கு உள்ள நோய் பற்றி கூறினார்.

-விளம்பரம்-

இரவில் வீடு செல்ல அடம்பிடித்தார் :

ஒருமுறை எனக்கு சாப்பாடு வந்தபோது அவருக்கு பசிக்கிறது என்று அவர் கேட்க நான் கொடுத்தேன் மொத்தத்தையும் காலி செய்து விட்டார். அதன் பிறகு ஒரு நாள் இரவு நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று அடம் பிடிக்க நான் கூறினேன் `நீங்க வீட்டிற்கு போகலாம் ஆனால் இப்போது சென்றால் நடிகர் சந்திரபாபு மருத்துவமனையை விட்டு ஓடிப்போய் விட்டார் என்று செய்தியில் வரும் எனக் கூற, ஆமாம் பத்திரிகையில் அப்படி வரக்கூடாது என்று அவரை அவரே சமாதானம் செய்து கொண்டார்.

தன்னிடம் கடைசியாக கூறியது :

பின்னர் சில நாட்கள் போக சந்திரபாபுவிற்கு சிகிச்சை முடியும் முன்னரே எனக்கு சிகிச்சை முடிந்து விட்டது மருத்துவமனையை விட்டு செல்லும் முன்பாக சந்திரபாபு என்னிடம் “பாய் போய் வாங்க திரும்பவும் இங்கே வராதீங்க. என்று வேடிக்கையாக கூறினார். மஞ்சள் காமாலை நோய் இருந்த நிலையில் மது அருந்தியது அவருடைய உடலை மேலும் மோசமாகியது. இந்தநிலையில் மார்ச் 7ஆம் தேதி 1974ஆம் ஆண்டும் இரவு ரத்த வாந்தி எடுத்த அவர் தன்னுடைய உதவியாளர் கிருஷ்ணமுர்த்தியிடம் இரவு “நான் தூங்க போகிறேன், நீ கவலை படாமல் போய் படு என கூறிய சந்திரபாவு 1974ஆம் ஆண்டு 8ஆம் தேதி காலை காலமானார். அப்போது அவருக்கு வயது 46.

திருமணம் செய்து வைத்தவரே இறுதி சடங்கு செய்தார் :

இவருடைய இறுதி சடங்கிற்கு பிரபல நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பல பேர் வந்திருந்தனர். இவரது உடலை இவருக்கு திருமணம் செய்து வைத்த பிஷப் என்பவரே இறுதி சடங்கையும் செய்தார். இதனை பாரத்த பலரும் கண் கலங்கினார். நடிகர் சந்திரபாவு எப்போதும் சொல்வது ” என்னை புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என்னுடைய பெற்றோர்கள் கூட என்னை புரிந்து கொள்ளவில்லை. இதனால் யாராவது என்னை புரிந்து கொண்டதாக கூறினால், அது எனக்கு சந்தேகத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது என்பாராம்..

Advertisement