ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பார்த்து மிரண்ட தெலுங்கு நடிகர்.! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

0
238
Ajith

தமிழ் சினிமாவின் தல என்றழைக்கபடும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் எளிமை குறித்து பல்வேறு பிரபலங்களும் பாராட்டி இருக்கின்றனர். தற்போது தெலுங்கு நடிகர் சத்ரபதி சேகர் அஜித்தின் எளிமை குறித்தும், அவர் பணபு குறித்தும் புகழாரம் சூடியுள்ளார்.

ajithaction

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விசுவாசம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சத்ரபதி சேகர் என்பவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் குணசித்ர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அஜித்தின் “விசுவாசம்” படத்தில் நடித்த இவர், ஒரு பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி தெரிவிக்கையில் “நான் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறேன்.அஜித் சாருடன் இது தான் பர்ஸ்ட் பிலிம். அஜித் சாரின் எளிமையை கண்டு மிரண்டுவிட்டேன். பெரிய நடிகர் சின்ன நடிகர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் அனைவரிடமும் சகஜமாக பழகுகிறார்.

chatrpathi

இயக்குனர் ஓகே என்று சொல்லும் வரை படப்பிடிப்பு தளத்தை விட்டு நகர மாட்டார். அந்த அளவிற்கு டெடிகேஷன். இரண்டு முறை அவரது கையால் பிரியாணி சாப்பிட்டுள்ளேன். அதனை கூட அனைவருக்கும் அவரது கையால் தான் பரிமாறினார். மிகவும் எளிமையான மனிதர் ” என்று கூறியுள்ளார்.