தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் தவெக தனித்து போட்டியிடுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.
விஜய் அரசியல்:
இப்படி இருக்கும் நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் அவர்கள் விஜய் விமர்சித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.

சேரன் பதிவு:
உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன். அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி… அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்… நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க. எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல. மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்.
புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு… pic.twitter.com/Ze2dtbsKSc
— Cheran Pandiyan (@CheranDirector) April 2, 2026
விஜய் பற்றிய விமர்சனம்:
உழைப்பை முதல்ல மதிங்க… உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல… இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க, பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை. மக்கள் களம்… ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம். மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும் என்று கூறி இருக்கிறார்.






