கஜா புயல் பாதிப்பு..!விளம்பரமில்லாமல் உதவி செய்து வரும் நடிகர் தனுஷ்..!

0
137
Dhanush

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Dhanushgaja

அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.இந்நிலையில் நடிகர் தனுஷ் மூலம் பல்வேறு உதவிகள் மக்களிடம் கொண்டு சேர்ந்து வருகிறது.

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றம் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உதவி செய்து வருகிறார். நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற தலைவரான சுப்ரமணிய சிவாவின் தலைமையில் பல்வேறு ரசிகர் குழுக்கலும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்ய நடிகர் தனுஷ் 30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர் ரசிகர் குழுவினர். இதற்காக ஒரு திருமண மண்டபத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.