தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
தனுஷ் திரைப்பயணம்:
இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இட்லி கடை படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், அருண் விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்தினுடைய படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

படம் குறித்த தகவல்:
அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டார்கள். தற்போது இந்த படத்தினுடைய கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் அக்டோபர் இரவு 1 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இட்லி கடை படம் தொடர்பான செய்தி தான் தற்போது தினத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, தற்போது இந்த படத்தினுடைய கடைசி கட்டப் படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் சில தினங்களாகவே நடந்து கொண்டு இருந்தது.
https://www.youtube.com/watch?v=bW3c0N1ivZg
தீ விபத்தில் நடந்தது:
இந்த பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்புக்காக செட் அமைத்து இருக்கிறார்கள். ஆனால், படப்பிடிப்பு முடிந்தும் இந்த செட் பிரிக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் நேற்று இரவு இந்த செட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காற்றின் காரணமாக செட்டினுடைய பெரும்பாலான பகுதிகளுக்கு தீ பரவி இருக்கிறது. அருகில் இருந்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவலை கொடுத்து தீயை அணைத்தார்கள். தற்போது இந்த இடத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் யாருக்குமே எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.






