தனுஷ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம், குவியும் வாழ்த்துக்கள்- என்ன படம் தெரியுமா?

0
429
- Advertisement -

லண்டனில் தனுஷின் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கதையை வைத்து எடுத்திருந்தார்கள்.

- Advertisement -

தனுஷ் படத்திற்கு கிடைத்த விருது:

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் 10-ஆவது ‘லண்டன் நேஷனல் பிலிம் அகாடமி திரைப்பட விருது விழா’ லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்திருக்கிறது. இதில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

ரசிகர்கள் வாழ்த்து:

இதை அடுத்து படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவும் போட்டிருந்தார்கள். இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்கிறார். இதற்காக இவர் மொட்டை அடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தனுஷ் திரைப்பயணம்:

இந்த படத்திற்கு ‘ராயன்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் படங்கள்:

மேலும், இந்த படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் தனுஷ் கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement