தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா..? பாத்தா அசந்துடுவீங்க

0
672
Actor-Dhanush

நடிகர் தனுஷ் பன்முக திறமைகள் கொண்ட ஒரு சிறந்த கலைஞர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவின் ஒரு ஆடையாள நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ள ” தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகீர் ” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

dhanush

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகர், கவிஞர் என்று பன்முக திறமைகளை வைத்துள்ளார் , சமீபத்தில் இவர் இயக்கிய “பா. பாண்டி” என்ற படத்தின் மூலம் தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதையும் நிரூபித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஒரு படத்தை இயக்க போகிறாராம்.

இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்டால் உங்களுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி அசந்து விடுவீர்கள் விடும். நடிகர் தனுஷ் இந்த படத்தை 70 கோடி ருபாய் பட்ஜெட்டில் எடுக்க போகிறாராம். முதலில் 100 கோடி என்று தான் இந்த படத்திற்ககான பட்ஜெட்டை முடிவு செய்திருந்தாராம். பின்னர் அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்டு படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொண்டாராம்.

dhanush actor

இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்ற எந்த தகவலையும் அவர் அளிக்கவில்லை. தற்போதைக்கு தான் நடித்துள்ள ஹாலிவுட் படம் வெளிவருவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர் தனுஷ்.