ரஜினியை போல வருவேன் ! தோற்றுப்போய் மரணமடைந்த திலீப் !

0
5705
- Advertisement -

70களில் உருவான மிகத் திறமையான நடிகர்களில் நடிகர் திலிப்பும் ஒருவர். ரஜினியைப் போலவே பெங்களூரில் இருந்து சென்னைக்கு நடிக்க வந்தவர் திலீப்.
ராஜினியைப் போலவே பிலிம் சிட்டியில் படித்தவர், ராஜினியைப் போலவே இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.

-விளம்பரம்-

ஆனால் ரஜினியைப் போல ஹீரோவாக திலிப்பால் முடியவில்லை. 1980ஆம் ஆண்டு கமல் நடித்த வறுமையின் நிறம் சிறப்பு என்ற படத்தில் திலிப்பையும் துணை நடிகராக அறிமுகக் செய்தார் பாலசந்தர்.

- Advertisement -

வறுமையின் நிறம் சிகப்பு படம் நன்றாக ஓடியது. துணை நடிகராக நடிக்க திலிப்பிற்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால், திலிப்பிற்கு ஹீரோவாக தான் ஆசை. இதனால் சில தமிழ் படங்களில் ரஜினிக்கு எதிராக ஹீரோவாக நடித்தார் ஆனால் அவை சரியாக ஓடவில்லை.
ஹீரோவாக ரஜினியை ஜெயிக்க மீடியவில்லை. பின்னர் துணை நடிகராகவே அடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் ஹீரோவாக நடிக்கவில்லை எனினும் தெலுங்கு, மலையாலம் ஆகிய மொழிகளில் ஹீரோவாக நடித்தார் திலீப்.

வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே, சம்சாரம் அது மின்சாரம், எங்க ஊரு பாட்டுக்காரன், ஊருக்கு உபதேசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் திலீப்.தன்னை ரஜினிக்கு போட்டியாக நினைத்து அவரைப் போலவே வந்த திலீப் தனது கடைசி வாழ்க்கை வரை துணை நடிகராகவே இருந்தார்.
தனது கடைசி கால வாழ்க்கையில் உடல் நலம் சரியில்லாமல் போக அவரது மனைவி மற்றும் மகள் பாவ்யாஸ்ரீ ஆகியோர் அவரைப் பார்த்துக் கொண்டனர்.கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஒரு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் திலீப்.

-விளம்பரம்-
Advertisement