டீ ஆத்தினவர் முதலமைச்சராவலயா, அது மாதிரி தான் அவன் நடிகனானது – கவுண்டமணியின் அதே நக்கலுடன் பேசியுள்ள அவரின் அக்கா.

0
1373
goundamani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார். மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது.

-விளம்பரம்-
goundamani - Twitter Search / Twitter
வேலாயுதம் படத்தின் போது கவுண்டமணி அம்மாவை சந்தித்த விஜய்

அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். அதோடு தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. மேலும், இவர் ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்தது திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமம் என்றாலும் இவர் வாலிப பருவத்தில் வளர்ந்தது எல்லாம் வல்லகுண்டபுரம் என்ற கிராமம் தான்.

- Advertisement -

கவுண்டமணியின் வீடு :

இது உடுமலை, பொள்ளாச்சிக்கும் இடையில் இருக்கு. இந்த வல்லகுண்டபுரம் கிராமம் கவுண்டமணியின் பாட்டி வீடாகும். அதோட கவுண்டமணியின் அக்காவும் அங்கே தான் இருக்கிறார். மேலும், இவர் அதிகம் வல்லகுண்டபுரத்துக்கு தான் வருவார். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார். முதலில் இவர் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார்.

அந்த காலத்து அஜித் கவுண்டமணி :

பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். அதோடு கவுண்டமணியை அந்த காலத்து அஜித் என்று தான் சொன்னார்கள். ஏன்னா, கவுண்டமணி அப்போதே பேட்டிகளை அதிகம் குடுப்பது இல்லை. அப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்தவர்.

-விளம்பரம்-

உடன் பிறந்த அக்கா மயிலாத்தாள் :

இந்நிலையில் சமீபத்தில் கவுண்டமணியின் உடன் பிறந்த அக்காவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, என் பெயர் மயிலாத்தாள். அவருடைய பெயர் சுப்பிரமணி. சினிமாவில் தான் கவுண்டமணி என்று மாத்திட்டாங்க. ஏன்னா, அவர் நாடகத்தில் கவுண்டர் ஆக நடித்தாலும், நிறைய கவுண்ட் போட்டதாலும் அவரை கவுண்டமணி என்று மாற்றிவிட்டார்கள். ஊரில் விசேஷம் என்றால் தான் கவுண்டமணி வருவார். ஆனால், அவர் போனில் தினமும் பேசுவார். எங்கம்மா இறந்து 4 வருடம் ஆயிடுச்சு. அப்ப வந்தது கவுண்டமணி இன்னும் வரவில்லை. ஆனால், போனில் மட்டும் பேசிக் கொள்வோம். பன்னீர்செல்வம் காபி கடையில் டீ ஆத்திக் இருந்ததார் என்று சொல்றாங்க.

கடையில் டீ ஆத்தினவர் முதலமைச்சர் :

ஆனால், இப்ப முதல் அமைச்சராக இருக்கிறார். யாராலும் நம்ப முடியுதா? அந்த மாதிரி தான் சினிமாவில் கவுண்டமணி பெரிய நடிகனாக வருவான் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை. அவன் ஒரு ஆறாவது, ஏழாவது தான் படித்திருக்கிறார். படிச்சிட்டு இருக்கும்போது அவன் சினிமாவுக்குள் போய்விட்டான். முதலில் அவன் நிறைய நாடகங்களில் நடித்து இருந்தார். அதன் மூலம் தான் அவனுக்கு சினிமா மீது அதிக ஆசை வந்தது. பின் சென்னைக்கு சென்று நடிகன் ஆனார் என்று கவுண்டமணி வாழ்ந்த வீட்டையும் அவருடைய உறவினர்களைப் பற்றியும் அறிவித்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement