முதன் முறையாக தனது மகளின் குயூட் புகைப்படத்தை வெளியிட்ட ஜி வி பிரகாஷ். இதான் பெயராம்.

0
1101
gv prakash
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

ஜி பிரகாஷ், பின்னணி பாடகியான சைந்தவிவை திருமணம் செய்து கொண்டார். பின்னணி பாடகியான சைந்தவி 5 வயது முதலே சங்கீதத்தை கற்று தேர்ந்தவர். மேலும், இவரை பட்டியல் படத்தின் மூலம் சினிமா பாடகியாக அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தான். அதன் பின்னர் பல்வேறு பாடல்களை பாடிய சைந்தவி மதராசபட்டினம் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தான். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி சைந்தவி பெண் குழந்தைக்கு தாயாக ஆகி இருந்தார்.

இதனை ஜி வி பிரகாஷ்ஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட ஜி வி பிரகாஷ் மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஜி வி பிரகாஷ். மேலும், தனது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement