நடிகை ரோஜாவை குறித்து பவன் கல்யாண் ஆதரவாளர் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகரும், தொகுப்பாளரும் ஆக இருப்பவர் ஹைபர் ஆதி. இவர் போடும் பஞ்ச் டயலாக் மக்கள் மத்தியில் பிரபலம். இதனாலே இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், இவர் திரைப்பட விழாக்கள், அரசியல் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் எல்லாம் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க கூடியவர். அதுமட்டுமில்லாமல் இவர் நடிகரும், அமைச்சருமான பவன் கல்யாண் உடைய தீவிர ஆதரவாளர். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கூட இவர் பவன் கல்யாணத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்தார். இவருடைய பங்களிப்பை பார்த்து பவன் கல்யாண் தன் கட்சியில் ஏதாவது ஒரு பதவி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹைபர் ஆதி பேட்டி:
இருந்தாலும், பவன் கல்யாண் எந்த ஒரு பதவியையும் ஹைபர் ஆதிக்கு கொடுக்கவில்லை. இது குறித்து சிலர் கேள்வி எழுப்பியதற்கு, நான் பவன் கல்யானுக்காக தான் உழைத்தேன். பதவிக்காக உழைக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹைபர் ஆதி இடம் ரோஜா பற்றிய உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், எனக்கு பவன் பிடிக்கும். ரோஜாவுக்கு ஜெகன் பிடிக்கும்.

ரோஜா குறித்து சொன்னது:
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது. ஆனால், தெலுங்கு மொழியில் நடந்த ஜபர்தஸ்த் நிகழ்ச்சியின் நடுவராக ரோஜா இருந்தார். அதனால் அவர் மீது எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. காரணம், பல கலைஞர்கள் உருவாக அவர் காரணமாக இருந்திருக்கிறார். அதனால் தான் அவர் மீது எனக்கு இன்னும் மரியாதை இருக்கிறது என்று கூறியிருந்தார். அதற்குப் பின் உங்களுடைய திருமணம் எப்போது? என்று கேட்டு இருக்கிறார்கள்.

திருமணம் குறித்து சொன்னது:
அதற்கு ஆதி, ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருமணமானது போல் நடித்து விட்டேன், யூடியூப்களில் பைத்தியக்காரத்தனமான விஷயங்கள் எல்லாம் செய்கிறேன். அதனால் சில வருடங்கள் இதையே செய்யலாம் என்று இருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் திருமணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று வேடிக்கையாக பதில் அளித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா.
ரோஜா திரைப்பயணம்:
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார்.






