நான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .! நெகிழும் பிரபல தமிழ் நடிகர்.!

0
558
- Advertisement -

இவர் முதன் முதலில் விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவரது தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெய். அந்த படத்தில் அச்சு அசலாக விஜய் போலவே இருந்ததால் இவர் உண்மையில் விஜய்யின் தூரத்து சகோதரார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது.

-விளம்பரம்-

பகவதி படத்திற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்துவிட்டார், நடித்தும் வருகிறார்.

- Advertisement -

அதே போல ராஜா ராணி படத்தில் இவரது வெகுளியான நடிப்பு பலரையும் கவர்ந்தது. தற்போது கோபி நயினார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜெய். சமீபத்தில் இந்த படம் குறித்து பேசுகையில் விஜய் தனக்கு சொன்ன ஒரு மிகப்பெரிய அட்வைஸ் பற்றியும் கூறியுள்ளார் ஜெய்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ஒரேமாதிரி திரும்பத் திரும்ப நடிச்சுக்கிட்டு இருக்க முடியாதே! `எங்கேயும் எப்போதும்’, `ராஜா ராணி’க்குப் பிறகு அதேமாதிரி அப்பாவியான கேரக்டர்கள் நூற்றுக் கணக்குல வந்தன. விட்டா, அதையே நம்ம டெம்ப்ளேட் ஆக்கிடுவாங்கனு நினைச்சுத் தவிர்த்தேன்.

-விளம்பரம்-

`பகவதி’ படத்துக்குப் பிறகு விஜய் சார்கிட்ட அடிக்கடி வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருந்தப்போ, `இப்படி சப்போர்ட்டிங் ரோல் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னைக் கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க’னு சொன்னார். ஒரேமாதிரியான கேரக்டர்ல நடிக்கிறப்போ, விஜய் சார் சொன்னதுதான் நினைவுக்கு வரும்.”

Advertisement