அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான், வறுமை நிலையிலும் அம்மாவின் ஆசைக்காக கலெக்டராக படித்து வரும் களவாணி சிறுமிக்கு தமிழ் நடிகர் உதவி.

0
211
manisha
- Advertisement -

கலக்டராக ஆசைப்பட்டு படித்து வரும் களவாணி நடிகைக்கு பிரபல நடிகர் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நாளடைவில் திரையில் பிரபலமான நடிகர்களாக பல பேர் வலம் வந்திருக்கிறார்கள். ஷாலினி, மீனா என பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்க துவங்கி பிற்காலத்தில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தில் அவரின் தங்கையாக நடித்த இவரும் ஹீரோயினாக வந்திருக்க வேண்டுவது தான். அதுவும் மாபெரும் இயக்குனர் பாலு மகேந்திரா படத்தில் தான்.

-விளம்பரம்-

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த படம் களவாணி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் விமலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இந்த படத்தின் முலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். முதலில் இவர் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : ‘நான் பெரிய உத்தமி இல்லை’ – படு ஓப்பனாக பேசிய விக்ரம் படம் நடிகை.

- Advertisement -

படிப்பில் கோல்டு மெடல் :

அதற்கு பிறகு இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் சினிமாவில் நடித்து கொண்டே தன் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்து இருந்தார். மேலும், ஒரு முறை இவர் பேட்டியில் எனக்கு நான்காம் வகுப்பு படிக்கும்போதே தமிழ் படத்தில் தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்றதால் கோல்டு மெடல் கிடைத்தது. பிறகு கல்லூரியில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றதால் மீண்டும் கோல்டு மெடல் கிடைக்க இருப்பதாக சொல்லி இருந்தார்.

மனிஷா நடித்த சீரியல்கள் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மனிஷா, களவாணி படத்துக்கு பின்னர் ஒரு 10 படம் பண்ணிட்டேன். இந்த லாக் டவுனிலால் தான் எந்த படமும் பண்ணாம இருக்கேன். களவாணிக்கு முன்னும் சரி பின்னும் சரி பல சீரியலில் நடித்து இருக்கிறேன். அதுவும் Avm தயாரிப்பில் மட்டும் 5 சீரியல் பண்ணி இருக்கிறேன். ன் அப்பா இருந்தும் இல்லாதது மாதிரி தான். என் அம்மாவிற்கு நான் கலெக்டர் ஆகணும் என்பது தான் ஆசை. எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தான் ஆசை.

-விளம்பரம்-

படிக்க கஷ்டப்பட்டு வரும் மனிஷா :

அதனால் தான் படிப்பு மற்றும் நடிப்பு இரண்டையும் நன்றாக செய்துவருகிறேன். மேலும், என் படிப்பிற்கு இப்போதைக்கு பலர் உதவி செய்கிறார்கள். ஆனால், புத்தகங்கள் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அதையும் நானே சம்பாதித்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மனிஷாவின் படிப்பிற்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார் பிரபல நடிகர் ஜெய்.

ஜெய் செய்த உதவி :

தற்போது மனிஷா எல்.எல்.பி சட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கிறார்.. அடுத்து ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறார். அதற்கான ஆரம்ப கட்ட படிப்புக்காக தனக்கு புத்தகங்கள் வாங்கித் தருமாறு நடிகர் ஜெய்யிடம் மனிஷா பிரியதர்ஷினி உதவி கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை ஏற்று மனிஷா பிரியதர்ஷினிக்கு அனைத்து புத்தகங்களையும் ஜெய் வாங்கி கொடுத்து நன்றாக படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்றும், தொடர்ந்து படிப்புக்கான எல்லா உதவிகளையும் செய்வேன் என்றும் வாழ்த்தினார். ஜெய்யை மனிஷா பிரியதர்ஷினி நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

Advertisement