தினமும் குடித்துவிட்டு தான் ஷூட்டிங்குக்கு வருவார் ! பிரபல நடிகர் மீது இயக்குனர் புகார் !

0
1375
jai

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்த படம் பலூன். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரைக்கு வந்தது. இந்த படத்தின் சூட்டிங்கிற்கு ஜெய் சரியாக வரவில்லை எனவும், எப்போதும் படப்பிடிப்பிற்கு குடித்து கொண்டுதான் வருவார் என சரமாரியாக ஜெய் மீது குற்றசாட்டுகளை வைத்தார் தயாரிப்பாளர். இதற்கு ஆதாரம் கூறும் வகையில் இயக்குனர் சினிஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெய் பற்றி பலவற்றை எழுதி இருந்தார். மேலும், படம் மக்களுக்கு பிடித்திருந்தாலும் அது பொருளாதார ரீதியாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்ப்படுத்தி உள்ளது எனவும் கூறினார் இயக்குனர் சினிஷ்.
Jai-Baloonஇதனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் வரையில் ஜெய்க்கு நடிக்க தடை விதிக்கவும் புகார் அளித்தனர்.இதெற்கெல்லாம் பதில் அளிற்கு வகையில் தற்போது பேசியுள்ளார் நடிகர் ஜெய்.

இது எல்லாம் அவர்களுக்கு என்மீது உள்ள தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகும். அவர்கள் கூறுவதற்கான எந்த ஒரு சான்றுகளும் இல்லை. தினமும் சரியான நேரத்திற்கு சூட்டிங் சென்று படத்தினை முடித்து கொடுத்துள்ளேன்.

பலூன் படத்தினால் நஷ்டம் எனக் கூறுகிறார்கள். ஆனால் படம் ₹ 7 கோடி வசூல் செய்துள்ளது. இது நஷ்டம் ஆகாது. இது ஒரு ஹிட்டான படமாகும். நான் எப்படி என்று என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றாக தெரியும். இதுவரை இப்படி யாரும் என்மீது புகார் கூறியது இல்லை, என அவர்களுக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ஜெய்.