மீண்டும் ஜெய் செய்த செயல்.! சம்பவ இடத்திலேயே போலீசார் கொடுத்த தண்டனை.!

0
796
jai
- Advertisement -

தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஜெய் சில மாதங்களுக்கு முன்னர் குடிபோதையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபாத்தில் காரில் அதிக இரைச்சல் எழுப்பியபடி ஒட்டி சென்றதால் நடிகர் ஜெய்க்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகரான ஜெய் எண்ணென்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இல்லை என்றாலும், இவர் இக்கால இளசுகள் மத்தியில் ஒரு சிறந்த நடிகராக கருதப்பட்டு வருகிறார். இவர் நடித்த ‘சென்னை 28, எங்கேயும் எப்போதும்’ போன்ற படங்கள் இவருக்கு ஒரு தனித்துவமான பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஆடி காரில் அதிவேகமாக சென்ற நடிகர் ஜெய், சென்னையில் உள்ள அடையார் மேம்பாலத்தில் உள்ள சாலை தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதில் நடிகர் ஜெய் மது அருந்திவிட்டு விபத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி அதிக இரைச்சலை உண்டாகும் சைலென்சரை கொண்ட காரை ஒட்டி வந்த நடிகர் ஜெய்யின் காரை சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து காவல் துறையிடம் தனது தவறை ஒப்புக்கொண்ட நடிகர் ஜெய் இதுபோன்று இனி செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement