காலங்காலமாகவே சினிமா பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் நடிப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகரான ஜெய் சங்கரின் மகன் சின்னத்திரையில் கால் தடம் பதித்துள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். இவர் பெரும்பாலும் படங்களில் சண்டை காட்சிகள், துப்பறிவாளன், காவலர் போன்ற வேடங்களில் தான் நடித்திருப்பார்.
இதனால் இவர் தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.
இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் விஜய் சங்கர். இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர். இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சஞ்சய் சங்கர் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் மளவிகாவிற்கு திருமணம் – வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.
அதற்கு பிறகு இவர் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் அவர்கள் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் தொழிலதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.
இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. கதாநாயகி பாக்கியலட்சுமி தொழில் ரீதியாக முன்னேற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவர் தொழிலதிபர் ராஜசேகர் வீட்டிற்கு சமைத்து கொடுத்துள்ளார். அப்போது தொழிலதிபர் ராஜசேகர் ஆயிரம் பேருக்கு சமைக்க பாக்யலக்ஷ்மிக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார்.
இதில் பாக்கியா வெற்றி பெறுவாரா? பாக்கியா தொழிலதிபராக மாறுவாரா? என்று பல திருப்புமுனைகள் உடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஒரு சில காட்சிகளில் வந்த தொழிலதிபர் சஞ்செய் சங்கர் இனிவரும் காலங்களில் தொடர்களில் அதிகம் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மிகப் பிரபலமான காமெடி நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு மௌன ராகம் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.