“ஏங்க ஜெய், அன்னதானத்துக்கு எல்லா செலவையும் நீங்க பண்றீங்க. அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா ?” ஜெய்ஷங்கர் அளித்த பதில்.

0
395
- Advertisement -

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கபட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டு தனக்கென்ற பாதையில் சினிமாவில் வலம் வந்தவர் ஜெய்சங்கர். இவர் 1965- இல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மேலும், இவர் படங்களில் பல வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகருக்கு இணையாக மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர் ஜெய்சங்கர்.

-விளம்பரம்-

இவரை மக்கள் கலைஞர் என்றுதான் அழைத்தார்கள். காரணம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருடைய நடிப்பில் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.அந்த அளவிற்கு பிஸியான நடிகராக வலம் வந்தார் ஜெய்சங்கர். மேலும், இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி இருந்தார். தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா ஹீரோக்களில் ஜெய்சங்கர் தனித்துவமான திகழ்ந்தார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மக்களை மகிழ்வித்தும் வந்தார்.

- Advertisement -

ஒரு படம் சரியாக அமைய கதை மட்டும் போதுமானதில்லை காதல், காமெடி, சண்டை காட்சிகள் என அனைத்தும் வேண்டும் என்ற விஷயங்களையும் சொன்னவர் ஜெய்சங்கர். ஜெய் ஷங்கருக்கு தனது வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவாராம். முழு செலவையும் அவரே ஏற்று நடத்தி வைக்கும் அந்த விருந்தை அவரே முன் நின்று பரிமாறுவதுதானே முறை ? அதுதான் இல்லை ஒவ்வொரு விருந்துக்கும் யாராவது ஒரு பிரபலத்தை அழைத்து வந்து அவர்கள் கையால் அந்த அனாதைக் குழந்தைகளுக்கு விருந்து பரிமாற வைத்து அதைப் பார்த்து மகிழ்வாராம் ஜெய் ஷங்கர்.

சரி, ஏன் இப்படிச் செய்தார் ஜெய்சங்கர் ? புரிந்து கொள்ள முடியாத ஒரு நண்பர் இந்தக் கேள்வியை ஜெய்சங்கரிடமே கேட்டு விட்டாராம். “ஏங்க ஜெய், விருந்துக்கான எல்லா செலவையும் நீங்க பண்றீங்க. அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா ?” ஜெய்சங்கர் புன்னகைத்தாராம். நண்பர் விடவில்லை : “சிரிக்காதீங்க ஜெய், ஒண்ணு நீங்க பரிமாறுங்க. அல்லது உங்க மனைவி குழந்தைகளை விட்டு பரிமாற சொல்லுங்க. யாரோ ஒரு மூணாவது மனிதர்…”

-விளம்பரம்-

நண்பரின் பேச்சை இடைமறித்த ஜெய்சங்கர் சிரித்தபடி சொன்னாராம் இப்படி : “கொஞ்சம் பொறுங்க. நான் கூப்பிட்டுட்டு வர்ற பிரபலங்களை கவனிச்சு இருக்கீங்களா ? அவங்க யாருமே இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கெல்லாம் போய் உதவி செய்யற பழக்கம் இல்லாதவங்க. அதுக்கான நேரம் இல்லாதவங்க. அது பற்றின விவரம் தெரியாதவங்களாக கூட இருக்கலாம் .

அதனால இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி அவங்களை நான் கூப்பிடறேன். இந்த மாதிரியும் இடம் இருக்கு. இப்படிக் கூட உதவி செய்யலாம் என்று அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான் ! இப்படி வர்ற பத்து பேர்ல ஒரே ஒருத்தர் மனசில இந்த உதவி பதிஞ்சா கூடப் போதுமே ! எதிர்காலத்தில அவங்களும் கூட இதுமாதிரி உதவிகளைச் செய்ய முயற்சி செய்யலாம் இல்லையா ? அதுக்காகத்தான் இப்படி கூப்பிடறேன்!” ஜெய்சங்கரின் இந்தப் பதிலைக் கேட்ட நண்பர் மௌனமாகிப் போனாராம்.

Advertisement