சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் வந்தவர்கள் தான் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா. சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர், எடிட்டர் ஆக பணிபுரிந்தவர் மோகன். எடிட்டர் மோகன் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவருடைய மகன்கள் தான் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி மோகன். மூத்த மகன் மோகன் ராஜா திரைப் படங்களை இயக்கும் இயக்குனராக பணி புரிகிறார். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். மகள் ரோஜா மருத்துவ துறையில் பணி புரிகிறார்.
இளைய மகன் ஜெயம் ரவி பற்றி சொல்லவா?? வேண்டும். இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். இவருடைய எல்லா படங்களும் பிளாக் பஸ்டர் படம் தான். அந்த அளவிற்கு அவருடைய படங்கள் உள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளி வந்த ‘கோமாளி’ படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது பூமி மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. சினிமாவை பொறுத்த வரை பல்வேறு நடிகர் நடிகைகள் குழ்நதை நட்சத்திரமாக நடித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் குழந்தை நட்சத்திரமாக நடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் இரண்டு படங்களில் குழ்நதை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த வீடீயோவை தமிழ் சினிமாவின் காமெடி நடிகரில் ஒருவரான நடிகர் சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜெயம் ரவி ப்ரோ, அழகோ அழகு என்று என்று குறிப்பிட்டு ஜெயம் ரவியை டேக் செய்துள்ளார் நடிகர் சதிஷ்.