ஜெயம் ரவிக்கு அக்கா இருக்காங்களா.! முன்பே வெளிவந்த புகைப்படம்.!

0
3600
jayan-Ravi
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிகர் ஜெயம் ரவி சினிமா பின்ணணி கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

ஜெயம் ரவியின் தந்தை மோகன் ஒரு பிரபல திரைப்பட எடிட்டர் என்பதும், மேலும் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ஜெயம் ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் ரோஜா மோகன்.

- Advertisement -

நேற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரக்க்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் சில திரைப்பட பிரபலங்களும் தாங்கள் சகோதரராக நினைக்கும் நபரின் கையில் ராக்கி கட்டி தங்களது சகோதர துவத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் தனது சகோதரிக்கு ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகர் ஜெயம் ரவி. அந்த புகைப்படத்தில்’எனது பெற்றோர்கள் எங்களுக்கு அளித்த மிகப்பெரிய பரிசு, என்னுடைய அக்கா. இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

-விளம்பரம்-
Advertisement