தனது பெயரை மாற்றிய ஜெயம் ரவி – புதிய தொழிலுக்கும் தனது புதிய பெயர், வைரலாகும் அறிக்கை

0
207
- Advertisement -

தன்னுடைய பெயர் மாற்றம் தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் பிரதர். இந்த படத்தை இயக்குனர் படம் ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சீதா, பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.

- Advertisement -

ஜெயம் ரவி பற்றிய தகவல்:

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் வெற்றி பெறவில்லை. இதை அடுத்து தற்போது ஜெயம் ரவி அவர்கள் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது

காதலிக்க நேரமில்லை:

காதலர் தினத்திற்கு ரிலீஸ் ஆக இருந்த படம் திடீரென ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. தற்போது அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னை இனிமேல் யாரும் ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் என்று ஜெயம்ரவி வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரத்தில் வருகிறது. அந்த அறிக்கையில் அவர், அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

-விளம்பரம்-

ஜெயம் ரவி அறிக்கை:

என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போதும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில் தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன். இந்த நாள் தொடங்கி, நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும். என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவைத் திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளைத் திரைக்கு கொண்டுவர உதவும். என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது.

இது நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ளப் பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்வமான முயற்சி. தமிழ் மக்கள் ஆசியுடன் எனது ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும் புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஊக்கம்தான், எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement