ஜெயம் ரவியின் மூத்த மகனை டிக் டிக் டிக் படத்தில் பார்த்திருப்பீங்க. அவருடைய இளைய மகனை பார்த்துள்ளீர்களா ?

0
37518
jayamravi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தூள் கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர் என்பதும், மோகனின் மனைவியின் பெயர் வரலக்ஷ்மி என்பதும் தெரியும். 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இதன் பின் அனைவரும் இவரை ஜெயம் ரவி என்று தான் அழைத்தார்கள். இதைத்தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, எங்கேயும் காதல், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும், ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் டிக் டிக் டிக். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனான ஆரவ்வும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கர்ணன் படத்தை தடை செய்யுங்கள், இயக்குனரை கைது செய்யுங்கள். கருணாஸின் முக்குலத்தோர் அமைப்பினர் மனு.

- Advertisement -

ஜெயம் ரவிக்கு இரண்டாவது மகன் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் அயான் . அதே போல அவரது மகன் அயான் புகைப்படத்தை பல பேர் பார்த்திட வாய்ப்பும் இல்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜெயம் ரவியின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் அயான் புகைப்படம் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது ஜெயம் ரவியின் இரண்டாவது மகனா என்று வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

தற்போது ஜெயம் ரவி அவர்கள் பூமி என்ற படத்தில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , ரவி, பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

-விளம்பரம்-
Advertisement