கர்ணன் படத்தை தடை செய்யுங்கள், இயக்குனரை கைது செய்யுங்கள். கருணாஸின் முக்குலத்தோர் அமைப்பினர் மனு.

0
52634
karnan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வெளி வந்தது. இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”.

-விளம்பரம்-
Image result for dhanush karnan

- Advertisement -

இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் மாஸ் காட்டி உள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்த படம் மே 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 40 வது படமாகும். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதையும் பாருங்க : இயக்குனர் சமுத்ரகனியின் தாய் தந்தையரை பார்த்துள்ளீர்களா ? அரிய புகைப்படம் இதோ.

-விளம்பரம்-

மேலும், 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கர்ணன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டுமென்றும், இயக்குனர் செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன் அவர்கள் காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, 1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் தான் கர்ணன். இந்த படத்தை தடை செய்ய வேண்டும். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

தற்போது தான் தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதோடு அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற காட்சிகள் இடம்பெறுகிறது. ஆகையால் இதுபோன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement