பிரபல நடிகர் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆனது ஏன் என்பது பற்றி கூறியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை சோசியல் மீடியாவில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி விவாகரத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதோடு ஜெயம் ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் பேசாதீங்க. அவர் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் நெடிசன்கள் கேள்விக்கு கெனிஷாவும் பதிலடி கொடுத்திருந்தார்.
மும்பையில் செட்டில் ஆன ரவி:
இதற்கு இடையே ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்றும். பாலிவுடில் நடிப்பதற்கு முடிவு செய்து முயற்சித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. சூழ்நிலை எப்படி இருக்க, தற்போது ஜெயம் ரவி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ‘பிரதர்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், நட்டி நடராஜ், பூமிகா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பிரதர் படம்:
மேலும், வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. அதனால், பிரதர் படத்தின் பிரமோஷன் பணிகளில் மும்மரமாக படத்தின் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகர் ஜெயம் ரவியும் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் தான் மும்பையில் செட்டில் ஆனது குறித்து ஜெயம் ரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ‘பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் முன்னரே எனக்கு கொஞ்சம் வந்திருக்கின்றன.
ஜெயம் ரவி பேட்டி :
ஆனால், எனக்கு வந்தது எல்லாம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஆக வந்தது. எனது கதாபாத்திரம் பிடிக்காததால் அதுபோன்ற படங்களில் நடிக்காமல் தவிர்த்து விட்டேன். முக்கியமாக தமிழில் நாம் நல்ல நிலைமையில் தான் இருக்கிறோம். பின் எதற்கு பாலிவுட் சென்று அங்கு இரண்டாவது ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது பாலிவுட்டில் நடிக்க முடிவு செய்துள்ளேன். அதற்காக தமிழ் படங்களை முழுவதுமாக விட்டுவிட்டு போகவில்லை. பாலிவுடில் நடிப்பது எக்ஸ்ட்ரா தான். தமிழ் படங்களுடன் சேர்த்து ஹிந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
ஜெயம் ரவி விளக்கம்:
அதற்கான முயற்சிகளை தான் செய்து வருகிறேன். முன்பு வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டேன். தற்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். பாலிவுடில் வேலை செய்ய வேண்டும் என்றால் மும்பையில் செட்டிலாகித்தான் ஆக வேண்டும் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். பிரதர் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கும் ‘ஜீனி’ படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.