தன்னுடைய சினிமா அனுபவம் பற்றி நடிகர் ஜீவா பகிர்ந்து இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜீவா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின்னர் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியில் தான் முடிந்தது. அதனை அடுத்து அவர் கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த படம் பிளாக். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி, சாரா ஷியாம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ஜீவா அவர்கள் அகத்தியா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
ஜீவா படம்:
இந்த படத்தை பா.விஜய் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், ராசி கண்ணா, யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தான் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ஜீவா, நான் சினிமாவுக்கு நுழைந்து 22 வருடம் ஆகிவிட்டது.

ஜீவா அளித்த பேட்டி:
ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எல்லாம் வித்தியாசமான பயணமாக தான் அமைந்திருக்கிறது. என்னோட முதல் 10 வருஷம் ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த 10 வருஷம் வேறொரு மாதிரியாக இருந்தது. இந்த 22 வருஷத்தில் நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். விதவிதமான அனுபவம் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொண்டேன். நான் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் பண்ணவே கூடாது என்று இருப்பேன். காரணம், எனக்கு அது மேல கொஞ்சம் பயம். நான் பண்ணதில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படம். நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக இருப்பதால் பெரிய பட்ஜெட் படம் பண்ணி நஷ்டம் அடைந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
சினிமா பயணம்:
அதனால் தான் நான் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதில்லை. நான் 2003 இல் தான் நான் நடிகராக வந்தேன். இப்ப 2025 வந்துவிட்டது. இந்த 22 வருடத்தில் நிறைய வருடம் விஷயங்கள் மாறிவிட்டது. அதற்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும். இப்போது ஹீரோக்களுக்கு மத்தியில் எந்த போட்டியும் இல்லை. ஆனால், ஹீரோவோட மார்க்கெட்டிங் டீம்மோட காம்பிடிஷன் இருக்கிறது. அவங்க பயங்கரமாக வேலை செய்கிறார்கள். அடுத்து இது அடுத்த இது என்று ஏதாவது ஒன்று செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்கணும்.
https://www.youtube.com/watch?v=KsM0YeMp3XM
சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:
சிவகார்த்திகேயன் எல்லாம் என்னிடம் வந்து, நான் ஸ்கூல் படிக்கும்போதே உங்க படம் பார்த்து இருக்கிறேன் அண்ணா என்று சொல்லுவார். நாம் இப்போது என்ன படம் பண்ணினாலும் புதுசா என்ன பண்றாங்க என்று தான் பார்ப்பார்கள். ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பு, ஜெயம் ரவி, தனுஷ் இவங்க தான் என்னோட காம்பிடேட்டர்ஸ். நான் என் காலத்தில் இருந்தவர்களை தான் என்னுடைய போட்டியாக பார்க்கிறேன். இப்போ இருக்கிறவங்க எல்லாம் எனக்கு காம்பிடேட்டர்ஸ் கிடையாது. சிவகார்த்திகேயன், மத்த நடிகரோட எனக்கு காம்பிடேட்டர்ஸ் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நான் பிசியாக நடிக்கும் போது தான் சிவா சினிமாவுக்குள் வந்தார். விஜய் சேதுபதி எல்லாம் அப்பதான் வந்தவர் என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்






